அபுதாபியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண் உட்பட 6 பேர் பலி -
அபுதாபியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்குள் இலங்கையர்கள் உள்ளதாக அபுதாபி செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று காலை அபுதாபியில் உள்ள அல் ரஹா கடற்கரைக்கு அருகில் இந்த விபத்து இம்பெற்றுள்ளது.
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் லொரி ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில் பேருந்தில் இருந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் இலங்கை பெண்ணுக்கு மேலதிகமாக நேபாள நாட்டு பெண் மற்றும் பாகிஸ்தான் நாட்டு சாரதியும் உள்ளடங்குகின்றனர்.
ஏனைய மூவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளர்.
அபுதாபியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண் உட்பட 6 பேர் பலி -
Reviewed by Author
on
January 17, 2020
Rating:

No comments:
Post a Comment