அண்மைய செய்திகள்

recent
-

மலேசியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து-9 இந்தோனேசியர்கள் மாயம், ஒருவர் மரணம்

மலேசியாவை நோக்கி 20 இந்தோனேசிய தொழிலாளர்களுடன் சென்ற மரப்படகு மலாக்கா ஜலசந்தியில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்தோனேசியாவின் Rupat தீவிலிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசியர்களை  மலேசியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, இப்படகு விபத்திற்கு உள்ளாகி அதில் சென்றவர்கள் உயிருக்குப் போராடி வந்துள்ளனர்.
இந்த நிலையில்,10 பேர் மீட்கப்பட்டதாகவும் 10 பேர் காணவில்லை எனத் தெரிவித்திருந்தார் இந்தோனேசியாவின் Pekanbaru மீட்பு ஏஜென்சியின் தலைமை அதிகாரி ஐசக்.

தற்போது, 10 பேரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 9 பேரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படகில் சென்ற இந்தோனேசியர்கள் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக மலேசியாவில் வேலைக்கு செல்ல முயன்றவர்கள் எனச் சொல்லப்படுகின்றது.

கடந்த 2016ல், 101 இந்தோனேசிய தொழிலாளர்களுடன் மலேசியாவிலிருந்து வெளியேறிய படகு விபத்திற்கு உள்ளாகி சுமார் 60 பேர் உயிரிழந்திருந்தனர்.  இதே போல், 2009ம் ஆண்டு இந்தோனேசியாவின் Sulawesi தீவருகே நடந்த விபத்தில் 330 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் கட்டுமானத்துறையிலும் பாமாயில் தோட்டங்களிலும் வேலைத்தேடி இவ்வாறான ஆபத்தான கடல் பயணங்களை இந்தோனேசியர்கள் மேற்கொள்ளக்கூடிய சூழல் நிலவுகிறது.

Report by,
Migration Correspondent,
AMWW

மலேசியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து-9 இந்தோனேசியர்கள் மாயம், ஒருவர் மரணம் Reviewed by Author on January 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.