மட்டக்களப்பில் காணாமல்போன நபர் சடலமாக மீட்பு -
மட்டக்களப்பு, கல்லடி - திருச்செந்தூரில் காணாமல்போன நபர் இன்று மாலை கல்லடி கடற்கரை பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் 6ஆம் குறுக்கினை சேர்ந்த ஜுலியன் யூட் (32 வயது) என்பவர் நேற்று முன் தினம் வீட்டிலிருந்து சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து அவரை தேடிவந்த உறவினர்கள் நேற்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் மாலை அவரின் கல்லடி, திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் ஜுலியன் யூட்டின் மரணம் தொடர்பில் அவரின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் காணாமல்போன நபர் சடலமாக மீட்பு -
Reviewed by Author
on
January 06, 2020
Rating:

No comments:
Post a Comment