மன்னாரில் காதர் மஸ்தான் தலைமையில் மக்கள் சந்திப்பு-படங்கள்
வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய காதர் மஸ்தானின் மக்கள் சந்திப்பு 16-01-2020 இன்றைய தினம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்ளையும் உள்ளடக்கிய மக்கள் எதிர்கொள்கின்ற மாவட்ட ரீதியில் தீர்த்து வைக்கக்கூடிய பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான முடிவினை பெற்றுக் கொடுக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் அவருடைய உப்புக்குளம் அலுவலகத்தில் குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு ஆரம்பம் ஆகி இடம் பெற்றது.
குறித்த மக்கள் சந்திப்பில் மடு,நானாட்டான்,முசலி,மாந்தை மன்னார் பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்கள் தங்களுடைய காணிகள் தொடர்பான பிரச்சினைகள் உறுதி பெற்று கொள்வது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வு தொடர்பாகவும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் தீர்வுகளையும் பெற்று கொண்டனர்
குறித்த சந்திப்பில் பொது மக்கள் நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
January 16, 2020
Rating:

No comments:
Post a Comment