முசலியில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்த முன்னாள் எம்.பி ஹீனைஸ் பாரூக்---படம்
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹீனைஸ் நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஹீனைஸ் பாரூக் அரசினர் முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை 18-01-2020 மாலை இடம் பெற்றது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சி , காயா நகர் , கரடிக்குளி ,மறிச்சுக்கட்டி ,காயாக்குலி, ஹீனைஸ் நகர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக தெரிவு செய்யப்பட்ட 44 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள், ஹேயார் அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் வை.எம்.எம.ஏ. முசலி தெற்கு அமைப்பின் அனுசரணையுடன் குறித்த பின் தங்கிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்களும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹீனைஸ் பாரூக், ஆகியோர் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.
இதன் போது றோயல் கல்லூரி பழைய மாணவர்களினால் மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சி , காயா நகர் , கரடிக்குளி ,மறிச்சுக்கட்டி ,காயாக்குலி, ஹீனைஸ் நகர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக தெரிவு செய்யப்பட்ட 44 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள், ஹேயார் அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் வை.எம்.எம.ஏ. முசலி தெற்கு அமைப்பின் அனுசரணையுடன் குறித்த பின் தங்கிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்களும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹீனைஸ் பாரூக், ஆகியோர் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.
இதன் போது றோயல் கல்லூரி பழைய மாணவர்களினால் மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முசலியில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்த முன்னாள் எம்.பி ஹீனைஸ் பாரூக்---படம்
Reviewed by Author
on
January 20, 2020
Rating:

No comments:
Post a Comment