பேரறிவாளன் பரோல் இன்றுடன் முடிந்தது! மீண்டும் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார் -
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 7 பேர் 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் பேரறிவாளன்.
இவரது தந்தை உடல்நிலை பாதிப்பு, சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்குமாறு தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில் பேரறிவாளனினுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி ஒரு மாதம் பரோல் வழங்கியது.
இதையடுத்து சகோதரி மகள் திருமணத்தில் அவர் கலந்து கொண்டார். இந்த திருமணத்தில் சீமானும் கலந்து கொண்ட நிலையில் இருவரும் கட்டிபிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.
இந்த நிலையில் ஒரு மாதம் பரோல் முடிவடையும் நிலையில் இருந்தபோது, பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு ஆஸ்துமா மற்றும் உடல் தொற்றுநோய் பாதிப்பால் உடல்நிலை மோசமானதை அடுத்து மேலும் ஒருமாதம் பரோல் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து பரோலை இரண்டு மாதமாக தமிழக அரசு நீட்டித்தது. கடந்த இரண்டு மாதமாக அனுபவித்த வந்த பரோல் இன்றோடு முடிகிறது.
பரோல் நிறைவடைந்ததால் பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
பேரறிவாளன் பரோல் இன்றுடன் முடிந்தது! மீண்டும் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார் -
Reviewed by Author
on
January 14, 2020
Rating:

No comments:
Post a Comment