அண்மைய செய்திகள்

recent
-

திரை விமர்சனம்-சைக்கோ

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தரமான படங்களை கொடுத்து வருபவர் மிஷ்கின். அதுவும், கிரைம், த்ரில்லர் வகை படங்கள் என்றால் சீட்டின் நுனிக்கே மிஷ்கின் நம்மை கொண்டு வந்துவிடுவார், அவர் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள சைக்கோ அப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்
தொடர்ச்சியாக இளம் பெண்கள் கடத்தப்பட்டு அடுத்த நாள் தலையில்லாமல் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டு வைக்கப்படுகின்றனர். இந்த வழக்கை சில வருடங்களாக ராம்(இயக்குனர்) விசாரித்து வருகின்றார்.

ஆனால் ஒரு க்ளூ கூட கிடைக்கவில்லை, இதனால் காவல்த்துறையே என்ன செய்வது என்று தெரியாம் முழி பிதுங்கி இருக்கின்றனர். அதே நேரத்தில் அதிதி ராவ்-யை உதயநிதி ஒருதலையாக காதலித்து வர, ஒரு நாள் திடீரென்று அதிதியும் அந்த சைக்கோவால் கடத்தப்படுகின்றார்.

இதனால் போலிஸிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் வேகம் எடுக்காமல் இருக்க, உதயநிதியே இந்த வழக்கை முன்பு விசாரித்து, பின் தன் உடல்நலக்குறைவால் வேலையில்லாமல் இருக்கும் நித்யா மேனன் உதவியுடன் அதிதி ராவ்-யை அந்த சைக்கோவிடமிருந்து மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
மிஷ்கின் படம் என்றாலே நடிகர் நடிகைகள் அனைவர் உருவிலும் மிக்‌ஷினே தான் தெரிவார், அந்த வகையில் கண் தெரியாதவராக உதயநிதி மிகவும் மெனெக்கெட்டுள்ளார், அப்படியே கண் தெரியாதவர்கள் வாழ்க்கையை பிரதிப்பலித்துள்ளார், அவருக்கு பக்க பலமாக சிங்கம்புலியும் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் எமோஷ்னல் என ஸ்கோர் செய்துள்ளார்.

ராம் போலிஸ் அதிகரியாக பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும், உனக்கு ஹோப் கொடுக்க தான் என்னை இங்க கொண்டு வந்துள்ளார்கள் என்று அதிதியிடம் சொல்லி தூதுவன் போல் வந்து செல்கின்றார், இப்படி பல காட்சிகள் நாம் படித்த கதைகளின் வழியேவே மிஷ்கின் கதை சொல்லியுள்ளார்.
படத்தில் சைக்கோவாக வரும் இளைஞன் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு, அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பதபதக்க வைக்கின்றது, அதிலும் கிளைமேக்ஸில் சர்ச் செட்டப்பில் தனக்கு நடந்ததை அவர் சொல்லும் காட்சி, எல்லோரையும் கலங்க வைக்கின்றது.

கண்டிப்பாக இந்த படத்திற்கு லைட் ஹார்ட் பீபுள் செல்லாதீர்கள் என்பதே ஒரே அட்வைஸ், தலையை வெட்டி, உடலை மட்டும் காட்டும் காட்சிகள் எல்லாம் அட தமிழ் சினிமா தானா இது, என்று கேட்க வைக்கின்றது, அதற்கு பக்கபலமாக இருந்த சென்சார் அதிகாரிகளையும் பாராட்டலாம்.

நித்யா மேனன், உதயநிதி இருவரும் தங்களுக்கு ஒரு குறை இருந்தும், அதை குறையாக பார்க்காமல் இயல்பாக கடந்து செல்ல நினைப்பது, அதிலும் துவண்டு இருக்கும் நித்யாவை கண்ணத்தில் அறைந்து அவரை மீட்டுக்கொண்டு வரும் உதயநிதி, போன்ற காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

படத்தின் வசனங்களும் அருமையாக வந்துள்ளது, இங்கு மேல் சாதி, கீழ் சாதி என்று ஒன்றுமே இல்லை எல்லாமே பன்னீங்க தான் என்று சொல்லும் காட்சி ஒன்ரு போதும், புத்தர் பற்றிய தொகுப்பில் வரும் அங்குமாலி என்ற கொடூரன் எப்படி மனமாற்றம் அடைந்தான், புத்தார் அவனை என்ன சொல்லி திருத்தினார் என்பதன் மிஷ்கின் வெர்ஷனாகவே இந்த சைக்கோ பார்க்கப்படுகின்றது.

படத்தில் கண்ணுக்கு தெரியாத ஹீரோக்கள் என்றால் தன்வீர் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் தான், அதுவும் ஒரு காட்சியில் உதயநிதி கார் ஓட்ட, நித்யா மேனன் வழி சொல்வது போல் வருவது, நாமே காரில் உட்கார்ந்து பயணித்த அனுபவம், லைட் வெளிச்சத்தில் பாதைகள் மறைவது போல் காட்டிய காட்சி எல்லாம் செம்ம, இவர்கள் எல்லோரையும் விட அனைவரையும் மிஞ்சி, மிரட்டியது என்றால் இளையராஜாவின் பின்னணி தான், பதட்டத்தின் உச்சிக்கு நம்மை காட்சிக்கு காட்சி அழைத்து செல்கின்றது.

க்ளாப்ஸ்
படத்தின் நடித்த நடிகர், நடிகைகள், குறிப்பாக சைக்கோ கதாபாத்திரத்தின் தேர்வு.

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் குறிப்பாக ஒளிப்பதிவும், ராஜாவின் பின்னணி இசையும்.

கிளைமேக்ஸில் சொல்லப்படும் விஷயம், அதுவும் அதிதி அந்த தொலைக்காட்சியில் பேசும் காட்சிகள்.


 வில்லனின் டீச்சராக நடித்திருக்கும் கதாபாத்திரம், பேய் படம் கூட இப்படி மிரட்டாது.

பல்ப்ஸ்
சைக்கோ ஒவ்வொருத்தராக கடத்தப்படும் போது, அதுவும் ஒரு கார் பார்க்கிங்கில் கொலையே செய்கின்றார், அங்கு கேமரா இருக்கா என்று கூட போலிஸார் கேட்க மாட்டார்கள், இப்படி சில லாஜிக் மீறல்கள்.

வில்லன் எதற்காக பெண்களை, அதுவும் வேலையில் சிறந்து இருக்கும் பெண்களை கொல்கின்றார், சைக்கோ தான் என்றாலும், அதற்கான காரணத்தை தெளிவாக சொல்லாமல் விட்டது.

மொத்தத்தில் சினிமாவை விரும்பும் ரசிகர்களை கடத்துகிறான் இந்த சைக்கோ.

திரை விமர்சனம்-சைக்கோ Reviewed by Author on January 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.