கல்லீரல் கெடுவதற்கான காரணங்கள் என்னென்ன?
இது தினசரி 20 அவுன்ஸ் பித்த நீரை சுரக்கின்றது. உணவுச் சத்துக்களை கிளை கோஜனாக சேமித்து வைக்கின்றது, கிளைகோஜனை சர்க்கரையாக மாற்றுவது, உடம்பில் தேய்ந்து போன இரத்த அணுக்களை அழிப்பது போன்ற தொழில்களை புரிகின்றது.
இவ்வளவு அற்புத வேலைகளை செய்யும் கல்லீரல் கெடுவதற்கு நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு தவறுகளே காரணமாக மாறிவிடுகின்றது.
அந்த காரணங்கள் என்ன என்று தெரிந்தாலே போதும். இதிலிருந்து விடுபட முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
கல்லீரல் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
- பசியின்மை, மலச்சிக்கல், வாந்தி ஏற்படும். காய்ச்சல் வரும். வயிற்றின் மேல் பகுதி வீங்கும், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.
- கல்லீரல் ஒழுங்காக வேலை செய்யவில்லையெனில் உடலிலுள்ள ரசாயன நச்சுப்பொருட்கள் இரத்தத்துடன் கலக்கும் அபாயம் ஏற்படும்.
கல்லீரல் கெடுவதற்கு காரணம் என்ன?
- பசியில்லாமல் உண்பது, அதுவும் அளவுக்கு அதிகமாக உண்பதால் கல்லீரல் தனது செயல் திறனை விரைவில் இழக்கின்றது.
- மது அருந்துவதாலும், மற்ற போதைப் பொருட்களை உட்கொள்வதாலும் கல்லீரல் தனது செயல் திறனை இழக்கின்றது.
- அடிக்கடி உணவில் புரோட்டா, போன்ற மைதா மாவினால் ஆன உணவுகளை ஹோட்டலில் உட்கொள்வதாலும் கல்லீரல் செயல் திறனை இழக்கின்றது.
- அதிக உடலுழைப்பு, ஓய்வே இல்லாமல் இரவில் விழித்து வேலை செய்வதாலும் கல்லீரல் தன் செயல் திறனை இழக்கின்றது.
கல்லீரல் கெடுவதற்கான காரணங்கள் என்னென்ன?
Reviewed by Author
on
January 17, 2020
Rating:

No comments:
Post a Comment