பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகோரி அறைகூவல்!
தைப்பொங்கல் நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நீதிகோரி அறைகூவல் விடுத்துள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF) ஏற்பாட்டில் வருடா வருடம் இடம்பெறும் தைப்பொங்கல் நிகழ்வு தை மாதத்தினை "தமிழ் மரபுத் திங்கள்" (Tamil Heritage Month) என பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கருப்பொருளை முன்வைத்து ஜனவரி 14ம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரம்பரிய தமிழ் உடைகள் அணிந்து விழாக்களில் கலந்துகொண்டு தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கௌரவப்படுத்தியதுடன், தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற மண்டபம் கரும்பு, வண்ணமயமான ‘கோலம், கலைப் படைப்புகள், இசைக்கருவிகள், பொங்கல் பானை என்பனவற்றால் அலங்கரிக்கப்பட்டு தமிழ் மக்கள் போற்றும் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக அமைந்திருந்தது.
மேலும் தமிழ் பள்ளி மாணவர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் தமிழர்கள் பேணிக்காக்கும் விழுமியங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
தைப்பொங்கலை நாம் கொண்டாடும் போது, இலங்கையில் 30 ஆண்டு கால இனப்படுகொலைக்கான நீதி, பொறுப்புக் கூறல் மற்றும் அர்த்தமுள்ள அரசியல் தீர்வுக்காக பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் இன்னும் காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்பதனை அங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வெளிக்கொணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகோரி அறைகூவல்!
Reviewed by Author
on
January 17, 2020
Rating:

No comments:
Post a Comment