அண்மைய செய்திகள்

recent
-

விக்டோரியா மாகாணத்தை மொத்தமாக விழுங்கும் மூன்று காட்டுத்தீ....

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை சூழ்ந்துள்ள மூன்று காட்டுத்தீயால் 6,000 ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக திகில் தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டன் பகுதிக்கு ஒப்பாகும் இந்த காட்டுத்தீ. வெள்ளிக்கிழமை இரவு விக்டோரியா மாகாணத்தின் ஒமாயோ பிராந்தியத்தில் வைத்து மூன்று காட்டுத்தீ ஒன்றாக இணைந்துள்ளன.
தற்போதுவரை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

காட்டுத்தீக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கையும் 23 என அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மூண்ட இந்த காட்டுத்தீயால் 1,500 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளது.
அருகாமை மாகாணமான நியூ சவுத் வேல்ஸ்-ல் சுமார் 2,64,000 ஹெக்டேர் நிலப்பகுதியை காட்டுத்தீ விழுங்கியுள்ளது.

இதனிடையே பலமான காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பம் மேலும் அதிகரிக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாட்டின் தலைநகரான கன்பெராவிலும் வரலாற்றின் அதி உயர் புள்ளி வெப்ப நிலையாக
43.8 செல்சியல் பதிவாகியிருக்கின்றது. இது கடந்த 80 ஆண்டுகளில் பதிவான அதி உயர் புள்ளியாகும்.
இதேபோன்று சிட்னி நகரின் வட பகுதியில் அமைந்துள்ள Penrith-ல் 48 டிகிரி செல்சியல் பதிவாகியிருக்கின்றது.

மீட்பு நடவடிக்கைகளுக்காக 3000 இராணுவத் துருப்புகளும், 3 கடற்படைக் கப்பல்களும்,
பல்வேறு இராணுவ விமானங்களும், ஹெலிகொப்டர்களும் இந்தக் காட்டுத் தீ அபாயம் மிகுந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்ப்டிருப்பதை பிரதமர் Scott Morrison குறிப்பிட்டுள்ளார்.

விக்டோரியா மாகாணத்தை மொத்தமாக விழுங்கும் மூன்று காட்டுத்தீ.... Reviewed by Author on January 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.