அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக நீங்க வேண்டி விசேட பிரித்தோதல் நிகழ்வு

நாடளாவிய ரீதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ள 'கொரோனா' வைரஸின் தாக்கம் நாட்டிலிருந்து முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் வைரஸினால் பாதிக்கப்பட்ட அனைவரும் சுகம் பெற வேண்டியும் நேற்று புதன் கிழமை இரவு 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பிரித்தோதல் அனுசரிக்கப்பட்டது.


மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் மற்றும் அனுராதபுரத்தில் உள்ள 12 பௌத்த பிக்குகளை அழைத்து வைரஸ் தாக்கம் முற்றுமுழுதாக நீங்க வேண்டும் என்றும் அதே போன்று உலகம் முழுவதும் வைரஸினால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் சுகம் பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் விசேட பிரித்தோதல் நிகழ்வு நேற்று புதன் கிழமை நள்ளிரவு தொடக்கம் இன்று வியாழக்கிழமை காலை வரை நடை பெற்றது

குறித்து பூஜை வழிபாட்டு நிகழ்விற்கு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க எஸ்.குணபாலன், அதிபர் மற்றும் மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள, கிராம சேவகர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டு வைரசின் தாக்கம் முழுமையாக விடுபட வேண்டும் என்று கூறி குறித்த   நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் கொரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக நீங்க வேண்டி விசேட பிரித்தோதல் நிகழ்வு Reviewed by Author on February 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.