எப்படி கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது ? -
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், போதுமான சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும்.
அந்தவகையில் எந்த உணவுகள் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்வது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
- நீங்கள் உண்ணும் உணவில் போதுமான இரும்பு, உயிர்ச்சத்து பி 12 மற்றும் சி சத்துக்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
- பச்சைக் காய் மற்றும் கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெந்தயக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- உலர்ந்த பழங்கள், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகள் என்று அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அதிக இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், குறிப்பாகக் கொய்யா, பேரீச்சம் பழம், அத்திப் பழம் போன்றவற்றைத் தினமும் உட்கொள்ள வேண்டும்.
- உயிர்ச்சத்து சி இரும்புச் சத்தை உடலில் தக்க வைக்க உதவும். அதனால் கமலாப் பழம், எலுமிச்சை பழம், நாவல் பழம் போன்ற பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிராக்கோலி, தக்காளி, மிளகு போன்ற பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- உயிர்ச்சத்து பி சத்து நிறைந்த வெண்டைக்காய், முளைக்கட்டிய பயிர்கள், பூசணிக்காய் போன்ற காய்களை அதிகம் உண்ண வேண்டும்.
- கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில், முடிந்த வரை தேநீர், காபி, மது, கோதுமை உணவுப் பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அதிகமான வகையில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
- நாட்டுக் கோழி முட்டை, பருப்பு வகைகள், ஆட்டு இறைச்சி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றிலும் இரும்புச் சத்து நிரம்பி உள்ளது.
- முடிந்த வரை குதிரைவாலி, சாமை, திணை, கை குத்தல் அரிசி போன்ற அரிசி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
எப்படி கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது ? -
Reviewed by Author
on
February 15, 2020
Rating:

No comments:
Post a Comment