மன்னார் மாந்தையில் புதிய விலைக்கு நெல் கொள்வனவு-விவசாயிகள் மகிழ்ச்சி-படம்
அரசாங்கத்தின் புதிய நெல் கொள்வனவு விலைக்கு அமைவாக இன்று 05-02-2020 புதன் கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைமைச் செயலகத்தில் பொது முகாமையாளர் ரி.ஜேம்ஸ் தலைமையில் நெல் கொள்வனவு இடம் பெற்றது.
குறித்த நெல் கொள்வனவினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது காயவைத்த நெல் ஒரு கிலோ 50 ரூபாய் விதம் 70 கிலோ அடங்கிய ஒரு மூடை 3500 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டது.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அதிகலவான விவசாயிகள் தமது நெல்லை உரிய விலைக்கு விற்பனை செய்தனர்.
ஆரம்ப நாளான இன்று சுமார் 5 ஆயிரம் கிலோ நெல் இவ்வாறு மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைமைச் செயலகத்தில் பொது முகாமையாளர் ரி.ஜேம்ஸ் தலைமையில் நெல் கொள்வனவு இடம் பெற்றது.
குறித்த நெல் கொள்வனவினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது காயவைத்த நெல் ஒரு கிலோ 50 ரூபாய் விதம் 70 கிலோ அடங்கிய ஒரு மூடை 3500 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டது.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அதிகலவான விவசாயிகள் தமது நெல்லை உரிய விலைக்கு விற்பனை செய்தனர்.
ஆரம்ப நாளான இன்று சுமார் 5 ஆயிரம் கிலோ நெல் இவ்வாறு மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாந்தையில் புதிய விலைக்கு நெல் கொள்வனவு-விவசாயிகள் மகிழ்ச்சி-படம்
Reviewed by Author
on
February 06, 2020
Rating:

No comments:
Post a Comment