தலைமன்னார் பியர் மீள்குடியேற்ற கிராமத்திற்கு காதர் மஸ்தான் விஜயம்
நீண்ட காலமாக தாம் குடியிருக்கும் தலைமன்னார் பியர் மீள்குடியேற்ற கிராமம் மற்றும் அம்பாள்புரம் ஆகிய காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான், மாகாண பணிப்பாளர் மற்றும் மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பிரதேச செயலாளர் உறுப்பினர்களோடு மேற்படி பகுதிக்கு நேற்று களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் விரைவாக அப்பகுதி மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
2010ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி பகுதியில் குடியேறி வாழ்ந்து வரும் சுமார் 880 குடும்பங்கள் தாம் குடியிருக்கும் காணிகளை தமக்கு சொந்தமாக்கி உறுதி வழங்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் காதர் மஸ்தான் இது தொடர்பில் பல்வேறு முயற்சிகளை கடந்த காலங்களில் செய்து வந்திருந்தார்.
மேற்படி அதிகாரிகள் குழு நேற்று அந்த பகுதிக்கு விஜயம் செய்து கள நிலவரங்களை நேரடியாக பார்வையிட்டிருந்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட காதர் மஸ்தான், விரைவாக இங்கே குடியிருக்கும் சுமார் 880 குடும்பங்களுக்கும் காணிப் பத்திரங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
தலைமன்னார் பியர் மீள்குடியேற்ற கிராமத்திற்கு காதர் மஸ்தான் விஜயம்
Reviewed by Author
on
February 15, 2020
Rating:

No comments:
Post a Comment