மன்னார் மாந்தை மேற்கு சன்னார் பகுதியில் கேபில் கம்பிகளினால் கட்டப்பட்டு மாடுகள் திருட்டு-உரிமையாளர்கள் கவலை.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தில் உள்ள மேச்சல் தரவையை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக மாடுகள் இனம் தெரியாத நபர்களினால் சட்ட விரோதமாக கேபில் கம்பி மூலம் பிடிக்கப்படுவதாக பாதீக்கப்பட்ட கல் நடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று (12) புதன் கிழமை காலை குறித்த பகுதியில் கேபில் கம்பிகளினால் கட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மூன்று மாடுகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்காக செல்லுகின்ற மாடுகளை இனம் தெரியாத நபர்கள் கேபில் கம்பியினால் கட்டி மரங்களில் கட்டி விடுகின்றனர்.
இதனால் மாடுகள் திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, கம்பி கழுத்தை இருக்குகின்ற சந்தர்ப்பத்தில் மாடு உயிரிழக்கும் சம்பவமும் இடம் பெறுகின்றது.அவ்வாறு பல மாடுகள் உயிரிழந்துள்ளதோடு பல மாடுகள் இனம் தெரியாத நபர்களினால் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலே இன்று புதன் கிழமை காலை 3 மாடுகள் கேபில் கம்பியினால் கட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மாட்டின் உரிமையாளர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும் அடம்பன் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பாதீக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று (12) புதன் கிழமை காலை குறித்த பகுதியில் கேபில் கம்பிகளினால் கட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மூன்று மாடுகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்காக செல்லுகின்ற மாடுகளை இனம் தெரியாத நபர்கள் கேபில் கம்பியினால் கட்டி மரங்களில் கட்டி விடுகின்றனர்.
இதனால் மாடுகள் திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, கம்பி கழுத்தை இருக்குகின்ற சந்தர்ப்பத்தில் மாடு உயிரிழக்கும் சம்பவமும் இடம் பெறுகின்றது.அவ்வாறு பல மாடுகள் உயிரிழந்துள்ளதோடு பல மாடுகள் இனம் தெரியாத நபர்களினால் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலே இன்று புதன் கிழமை காலை 3 மாடுகள் கேபில் கம்பியினால் கட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மாட்டின் உரிமையாளர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும் அடம்பன் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பாதீக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாந்தை மேற்கு சன்னார் பகுதியில் கேபில் கம்பிகளினால் கட்டப்பட்டு மாடுகள் திருட்டு-உரிமையாளர்கள் கவலை.
Reviewed by Author
on
February 12, 2020
Rating:

No comments:
Post a Comment