அண்மைய செய்திகள்

recent
-

உலகையே அச்சுறுத்தும் கொறோணா வைரஸ் தாக்கத்தினால் இறந்த அனைத்துஆன்மாக்களுக்குமான இரங்கல் வழிபாடு

கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் உலகையே அச்சத்திற்குள்ளாக்கும் கொறோணா வைரசினால் இறந்தவர்களின்ஆன்மாக்களுக்கானஇரங்கல் வழிபாடு கறிற்ராஸ்-வாழ்வுதய மண்டபத்தில் அதன் இயக்குனர் அருட்பணி செ அன்ரன் அடிகளார் தலைமையில் 26-02-2020 இன்றையதினம் இடம்பெற்றது.

 இதில் கறிற்ராஸ்-வாழ்வுதயபணியாளர்கள் மற்றும் வாழ்வுதயத்தில் கணனிபயிற்சியினைபெறும் மாணவர்கள் அனைவரும்; இணைந்து கொண்டனர்.இவ் இரங்கல் வழிபாட்டில் குறிப்பாக இதனால் பாதிக்கப்பட்டு இறந்த ஆன்மாக்களுக்காகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தாக்கத்திலிருந்து விரைவாகமீண்டு உடல் உள ஆரோக்கியம் பெறுவுதற்கும் இறைஆசீர் வேண்டப்பெற்றது.

இவ்வழிபாடுபி.பகல் 12 மணிதொடக்கம் 1 மணிவரை இடம்பெற்றது.
இதனைத்தொடர்ந்து இரங்கல் செய்தியினைஅதன் இயக்குனர் கூறினார்.அதில் அவர் கூறுகையில் இன்றையகாலத்தில் இவ் உலகைஅச்சத்தில்ஆழ்த்தும் விடயம் கொறோணாவைரஸ். இதன் தாக்கம் படிப்படியாகபலநாடுகளில் பரவிவருகின்றது. குறிப்பாகசீனாவிற்குஅடுத்தாக இத்தாலி,தென்கொறியா போன்ற நாடும் பாதிக்கப்படுவதாக செய்திகளில் வாசிக்கின்றோம். எனவே இனமதவேறுபாடின்றி நாம் பல்வேறு மதங்களைபிற்பற்றுபவர்களாக இருந்தாலும் மனிதநேயத்தோடு நாம் வழிபடும் கடவுளிடம் இதனால் பாதிக்கப்பட்டு இறந்த ஆன்மாக்களுக்காகவும்  இவர்களை இழந்துதுயரப்படும் மக்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம். இவை மட்டுமல்லாது

இன்நோயினைகட்டுப்படுத்துவதற்கு இரவுபகல் பாராதுபாடுபடும் வைத்தியநிபுணர்களுக்கு இறைவன் நல்ல தொருவழிகாட்டியாகசெயற்படுவதற்கும் அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வதுகாலத்தின் தேவைஎன்பதைவிட இதுவே மனிதமாண்பை மதிக்கும் செயலாகுமமெனவும் கூறினார்.








உலகையே அச்சுறுத்தும் கொறோணா வைரஸ் தாக்கத்தினால் இறந்த அனைத்துஆன்மாக்களுக்குமான இரங்கல் வழிபாடு Reviewed by Author on February 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.