விடுதலைப்புலிகள் தொடர்பான சர்ச்சை கருத்து! முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு -
விடுதலைப்புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக கூறப்பட்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூலை 3 வரை பிற்போடப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜெயரத்ன இந்த திகதி பிற்போடலை அறிவித்தார்.
இன்று மன்றில் முன்னிலையான திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவினர், தமது விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாக மன்றுக்கு அறிவித்தனர்.
விசாரணைகளின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மன்றில் தெரிவித்தனர்
எனினும் இன்னும் சட்டமா அதிபரின் ஆலோசனை தமக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையிலேயே வழக்கின் திகதி பிற்போடப்பட்டது.
2018ம் ஆண்டு ஜூலை 2ம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது வடக்கில் குற்றச்செயல்களை நசுக்க விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகவேண்டும் என்று விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இது இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவான கருத்து என்று கூறியே அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் தொடர்பான சர்ச்சை கருத்து! முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு -
Reviewed by Author
on
February 15, 2020
Rating:

No comments:
Post a Comment