அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து - 6 பேர் பலி - 3 பேர் படுகாயம் -
தென்னிலங்கையில் அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
லுனுகம்வெஹேர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து காரணமாக மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் பயணித்த வாகனம் ஒன்று மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்றே விபத்திற்கு உள்ளாகியுள்ளதென தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து - 6 பேர் பலி - 3 பேர் படுகாயம் -
Reviewed by Author
on
March 09, 2020
Rating:

No comments:
Post a Comment