கொரோனா வைரஸ் தொற்று! இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 8200ஆக அதிகரிப்பு -
நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் இத்தாலியில் 721 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 528,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 23,942 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 377, 000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், 123,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதனால் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் இன்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு 712 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றினால் 8200ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று 498 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,145ஆக அதிகரித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் 696 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 365 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 11,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 578 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று! இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 8200ஆக அதிகரிப்பு -
Reviewed by Author
on
March 27, 2020
Rating:

No comments:
Post a Comment