இலங்கைக்கு அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுங்கள்! அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை -
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாங்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தாங்கள் மிகுந்த அச்ச நிலையில் இருப்பதாகவும், விரைவாக தங்களை இலங்கைக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்பங்களை பிரிந்து தாங்கள் இங்கு கல்வி கற்பதற்காக வருகைதந்ததாகவும், தங்களை எவ்வளவு விரைவாக அழைத்து செல்லமுடியுமோ அவளவு விரைவாக அழைத்துச்செல்ல நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் கூட தாங்கள் காசுக்கு வாங்கும் நிலையில் தற்போதைய நிலையில் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கு பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுங்கள்! அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை -
Reviewed by Author
on
March 27, 2020
Rating:

No comments:
Post a Comment