கொழும்பு மறைமாவட்டத்தின் அனைத்து புனித வார ஆராதனைகளும் ரத்து!
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை பொறுத்து சிலாபம் உட்பட்ட நாட்டின் ஏனைய பகுதிகளின் இந்த ஆராதனைகள் நிறுத்தப்படவுள்ளன.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவில் புனித திங்கள், புனித வியாழக்கிழமை, பெரிய வெள்ளி, புனித சனிக்கிழமை மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் நிறுத்தப்படுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
இந்த ஆராதனைகள் தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பப்படும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது. இலங்கையிலும், இந்த தொற்றினால் 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் நேற்று உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மறைமாவட்டத்தின் அனைத்து புனித வார ஆராதனைகளும் ரத்து!
Reviewed by Author
on
March 30, 2020
Rating:

No comments:
Post a Comment