ஜனாதிபதி விசேட செயலணிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்! -
நாட்டில் கொரோனா வைரஸ் வேகமான பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த ஜனாதிபதி விசேட செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, அந்த செயலணியின் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஓய்வூதியத்தைச் செலுத்துதல்
1. ஏப்ரல் மாதம் 2, 3ம் திகதிகளில் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் செலுத்தப்படும்.
2. இந்த இரண்டு தினங்களினுள் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இருப்பின், ஏப்ரல் 6ம் திகதி கொடுப்பனவுகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளும் 02 வழிமுறைகள் காணப்படுகின்றன.
- அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக
- அந்தந்த வங்கிகள் ஊடாக
5. அந்தந்த வங்கிகள் ஊடாக ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வோரின் பணம் ஏற்புடைய வங்கிக் கணக்குகளுக்கு ஏப்ரல் 2,3 ஆகிய திகதிகளில் வரவு வைக்கப்படும்.
6. வங்கிக் கணக்குகளில் காணப்படும் பணத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் ஓய்வுபெற்றோருக்கு ஊரடங்குச் சட்டம் காரணமாக ஏற்படும் போக்குவரத்துச் சிரமத்தைத் தவிர்ப்பதற்கான முறைமையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தேவையுடைய ஓய்வு பெற்றோர் தாம் வதியும் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர் மூலம் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
இந்த ஓய்வூதிய உரித்தாளிகள் அரசாங்கத்தினால் அருகிலுள்ள வங்கிக்கு ஏப்ரல் 2,3ம் திகதிகளில் அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் அந்த வங்கிகள் மூலம் அவர்களது ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
இதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதுடன், இதற்கு ஏற்புடைய கிராம உத்தியோகத்தர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்.
7. அந்தந்த நகரங்களில் காணப்படும் அனைத்து வங்கிகளும் குறைந்தபட்சம் ஒரு கிளையினையாவது இந்நாட்களில் திறந்து வைத்திருக்க அரச மற்றும் தனியார் வங்கியாளர்கள் இணங்கியுள்ளனர் என்பதையும் அறியத் தருகிறோம்.
ஜனாதிபதி விசேட செயலணிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்! -
Reviewed by Author
on
March 30, 2020
Rating:

No comments:
Post a Comment