அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயொருவர் மரணம்! -


2009ம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது ஒரேயொரு மகனை தேடியலைந்த பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி எனும் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தாயார் தனது 72வது வயதில் சுகவீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் பா.அருட்செல்வன் 21 வயதில் ஓமந்தை சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக கண் கண்ட சாட்சிகள் தன்னிடம் கூறியிருந்ததாக தாயார் பா.மங்கையற்கரசி தெரிவித்திருந்தார்.
இவர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையை சொந்த முகவரியாகவும், வவுனியா புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இந்த தாயார், காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் உறவுகளால் வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் (1111) நாட்களை எட்டியுள்ள நிலையில், அப்போராட்டத்தில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார்.

இவரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம், தட்டாதெருச்சந்தி, இலக்கம் 29/16, உடையார் ஒழுங்கையில் நாளை 5.3.2020 வியாழக்கிழமை 12.00 மணிக்கு இடம்பெறும் என்றும் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயொருவர் மரணம்! - Reviewed by Author on March 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.