கிரீஸ் நாட்டில் முதல்முறையாக அதிபர் பதவியை அலங்கரிக்கும் பெண்! கொரோனாவால் களையிழந்த விழா
கிரீஸ் நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜனவரியில் நடைபெற்றது. இதில் கட்சி சார்பற்ற வேட்பாளராக கேத்ரினாவின் பெயரை பிரதமர் கிரியாகோஸ் மிட்சோதாகிஸ் அறிவித்தபோது அரசியல் கட்சிகள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்தது. அதுமிட்டுமின்றி முக்கிய கட்சிகள் கேத்ரினாவுக்கு ஆதரவளித்தன.
கேத்ரினா வெற்றிக்கு 200 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 261 வாக்குகள் பெற்று கேத்ரினா வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இந்த தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு பிறகு கிரீஸ் புதிய அதிபராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கேத்ரினா நேற்று பதவியேற்றார்.
எனினும் கிரீஸ் நாட்டில் கொரோனா பரவியுள்ளதால் பதவியேற்பு விழாவில் எம்.பி.க்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்றனர்.

கிரீஸ் நாட்டில் கொரோனா வைரசுக்கு ஒருவர் உயிரிழந்ததுடன் 117 பேருக்கு இதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கூடும் விழாக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தையும் தவிர்க்க அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை கிரீஸ் நாட்டில் அரசியல் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த தேர்தலுக்கு பிறகு புதிய அரசு பதவியேற்றது. இதில் 18 அமைச்சர்களில் ஒருவர் மட்டுமே பெண் என்பதால் பிரதமருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் அதிபர் பதவிக்கு பெண் ஒருவரை வேட்பாளராக பிரதமர் அறிவித்தார்.
கிரீஸ் நாட்டில் அதிபர் பதவி பெரும்பாலும் சம்பிரதாய பதவியாக உள்ள நிலையில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கிரீஸ் நாட்டில் முதல்முறையாக அதிபர் பதவியை அலங்கரிக்கும் பெண்! கொரோனாவால் களையிழந்த விழா
Reviewed by Author
on
March 15, 2020
Rating:
No comments:
Post a Comment