அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் 14,000-ஐ நெருங்கும் துயரம் -


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், 870-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பலி எண்ணிக்கை 14,000-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி நாட்டில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 870-க்கு மேலாக இருந்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 740 பேர் இறந்துள்ளனர். ஸ்காட்லாந்து 80 பேரும், வேல்ஸில் 32 பேரும் வடக்கு அயர்லாந்தில் 18 பேரும் என பதிவாகியுள்ளது.
இதனால், இதன் மூலம் வியாழக்கிழமை பிற்பகல் மருத்துவமனையின் இறப்பு எண்ணிக்கை 13,828 ஆக இருந்தது. நான்கு நாடுகளும் தனித் தனியாக இறப்பு விகிதத்தை வெளியிடுவதால், இறப்பு எண்ணிக்கை நேற்று 12,958 ஆக இருந்தது.

இந்த இறப்பு எண்ணிக்கை மருத்துவமனைகளில் மட்டுமே, பராமரிப்பு இல்லங்கள், தனியார் வீடுகளில் இறப்புகள், முதியோர் இல்லங்களில் இறப்பு போன்றவை இதில் சேர்க்கப்படாததால், அதன் ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நாட்டில் இன்னும் ஊரடங்கு உத்தரவு மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இங்கிலாந்து கொரோனாவின் உச்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் 14,000-ஐ நெருங்கும் துயரம் - Reviewed by Author on April 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.