யாழில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 346 பேருக்கும் பரிசோதனைகள் நிறைவு!
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த 346 பேரில் 16 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
யாழ்ப்பாணம் நல்லூர் மருத்து அதிகாரி பிரிவைச் சேர்ந்த 28 பேருக்கும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கும் அவர்களைப் பராமரித்த 4 படையினருக்கும் என 36 பேருக்கு பிசிஆர் பரிசோதனை இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அவர்கள் அனைவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்று இன்று மாலை அறிக்கை கிடைத்துள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்ற 346 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் பரிசோதனைகள் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளன.
அவர்களில் 16 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் வெலிகந்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
நால்வர் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் 46 பேருக்கு இரண்டு முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தாவடியைச் சேர்ந்த 18 பேருக்கும் இரண்டு முறை பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தது. இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கே இனிவரும் நாள்களில் பரிசோதனைகள் இடம்பெறும். மேலும் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
அவர்களுக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததும் இறுதியாக சமூக மட்ட பரிசோதனைகள் நடைபெறும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 346 பேருக்கும் பரிசோதனைகள் நிறைவு!
Reviewed by Author
on
April 24, 2020
Rating:

No comments:
Post a Comment