அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வேல்ட் விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 800 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் கையளிப்பு

கொவிட் 19 நோய் அனர்த்த நிலமை காரணமாக  பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று வேல்ட் விசன் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி நிவாரணம் பெறாத தொழில் இன்றி தவிக்கும் மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகங்களை சேர்ந்த நானூறு குடும்பங்களுக்கு தேவையான உலர்  உணவுப் பொதிகள் கிரமசேவகர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது அவற்றில்  நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 400 குடும்பங்களுக்கும்

மன்னார் நகர பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜீவபுரம் ஜிம்ரோன் நகர் சாந்திபுரம் பகுதிகளைச் சேர்ந்த 400 குடும்பங்களுக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படை தேவைகளான அரிசி பருப்பு மா சோயா எண்ணை சமன் டீன் கடலை அடங்கிய பொதிகள் மேற்கண்டவாறு வழங்கிவைக்கப்பட்டது.






மன்னார் வேல்ட் விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 800 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் கையளிப்பு Reviewed by Author on April 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.