அண்மைய செய்திகள்

recent
-

மன்னாருக்கு பொருட்களுடன் வருகின்ற தென்பகுதி லொறிகள் உயிலங்குளத்துடன் மட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்-பொலிஸ்,இராணுவத்தின் பிரசன்னம் இல்லை.

தென் பகுதியில் இருந்து பொருட்களுடன் மன்னாரிற்கு வருகின்ற லொறிகளை மன்னார்-மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் 9 ஆம் கட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் நிறுத்தி மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை 04-04-2020 காலை முதல் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தின் அவசர நிலமைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் 03-04-2020 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தென் பகுதியில் இருந்து பொருட்களுடன் மன்னாரிற்கு வருகின்ற லொறிகள் உயிலங்குளம் 9 ஆம் கட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் நிறுத்தி, பின்னர் குறித்த லொறி கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மன்னாரில் இருந்து அழைத்துச்செல்லப்படும் பிரிதொரு சாரதியின் உதவியுடன் குறித்த லொறி மன்னாரிற்குள் கொண்டு வரப்பட்டு பொருட்களை வியாபார நிலையங்களுக்கு வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நடவடிக்கைக்கு வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் உயிலங்குளம் 9 ஆம் கட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (4) சனிக்கிழமை காலை முதல் பணிகள் ஆரம்பமானது.

இதன் போது   தென் பகுதியில் இருந்து மன்னாருக்கு பொருட்களை ஏற்றி வருகின்ற வாகங்கள் மற்றும் லொறிகள் உயிலங்குளம் பாடசாலைக்குள் அனுப்பப்பட்டு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் விசேட ஏற்பாட்டில் குறித்த வாகனங்கள் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.வவுனியாவில் இருந்து வருகின்ற லொறிகள் கிருமி நீக்கப்பட்டு மன்னாருக்கு அனுப்பப்படுகின்றது.

மேலும் தென்பகுதியில் இருந்து வரும் லொறிகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டு லொறியுடன் வந்த சாரதி மற்றும் நடத்துனர்கள் உயிலங்குளம் பாடசாலையுடன் மட்டுப்படுத்தப்படுகின்றனர்.

மன்னாரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சாரதிகள் ஊடாக தென்பகுதி லொறி மன்னாரிற்கு பொருட்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலகத்தில் இடம் அவசர கலந்துரையாடலின் போது குறித்த நடவடிக்கைக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்திருந்த போதும் இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த பகுதிக்கு அவர்கள் செல்ல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





மன்னாருக்கு பொருட்களுடன் வருகின்ற தென்பகுதி லொறிகள் உயிலங்குளத்துடன் மட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்-பொலிஸ்,இராணுவத்தின் பிரசன்னம் இல்லை. Reviewed by Author on April 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.