தொண்டமனாறு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கையில் வெளிவந்துள்ள விடயம் -
யாழ்ப்பாணம் -தொண்டமனாறு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரனின் உடலில் எவ்வித அடிகாயங்களும் இல்லை என்று தெரியவருகிறது.
சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை நீதிவானின் உத்தரவில் அவரது சடலம் மந்திகை வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் இன்று முற்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
"சடலத்தின் கழுத்து உட்பட உடலில் எந்தவொரு அடிகாயமும் இல்லை. கடல் விலங்குகளால் சடலத்தில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகத்தில் உரசல் காயம் காணப்படுகிறது.
நுரையீரல் பெரியளவில் வீக்கமடைந்துள்ளது. அதனால் அவரது இறப்பு நீரில் மூழ்கி இடம்பெற்றுள்ளது" என்று சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டமனாறு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கையில் வெளிவந்துள்ள விடயம் -
Reviewed by Author
on
April 26, 2020
Rating:

No comments:
Post a Comment