செப்டம்பர் மாதம் வரை பிரான்ஸில் எந்தவொரு விளையாட்டும் நடைபெறாது -பிரதமர் அறிவிப்பு -
கொரோனா அச்சுறுத்தல் பல நாடுகளில் பரவி இருக்கின்ற வேளையில் பிரான்ஸ் நாட்டில் விளையாட்டு உள்பட எந்த நிகழ்ச்சிகளும் செப்டம்பர் 1-ந் திகதி வரை நடைபெறாது என பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.
இதனால் பிரான்ஸின் முதன்மை கால்பந்து தொடரான லீக்-1 ரத்து செய்யப்பட்டுள்ளது.மே மாதத்தில் பயிற்சியை தொடங்கி ஜூன் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தி விடலாம் என தொழில்முறை கால்பந்து லீக் மற்றும் பிரான்ஸ் கால்பந்து பெடரேசன் நினைத்திருந்தது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு லீக்-1 புள்ளிகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி தகுதி பெறும் என எண்ணியது தற்போது போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா அச்சம் காரணமாக பிரான்ஸிற்கு முதல் ஏற்கனவே பெல்ஜியம் முதன்முதலாக கால்பந்து லீக் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செப்டம்பர் மாதம் வரை பிரான்ஸில் எந்தவொரு விளையாட்டும் நடைபெறாது -பிரதமர் அறிவிப்பு -
Reviewed by Author
on
April 30, 2020
Rating:

No comments:
Post a Comment