இலங்கையில் புதிதாக நான்கு பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு! -
இலங்கை மற்றும் ஜேர்மனி நிறுவனங்கள் இரண்டு இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் போது குறித்த பூச்சியினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இருந்து புதிய பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு மார்ச் மற்றும் பெப்ரவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவற்றுக்கான மாதிரிகள் கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிதாக நான்கு பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு! -
Reviewed by Author
on
April 19, 2020
Rating:

No comments:
Post a Comment