நீங்காத நினைவில்....ஓராண்டு நிறைவில்....
நீங்காத நினைவில்....ஓராண்டு நிறைவில்....
இலங்கை திருநாட்டின் இருண்ட நாள்-21-04-2019
கந்தக குண்டு அன்று
சொந்தங்களை கொன்று
கடந்து போனதே ஓராண்டு
கையில் பூச்செண்டுடன் இன்று
ஈஸ்ரர் தினத்திலே
ஈனப்பிறவிகளால்
இறை இல்லங்களிலில்
இயமன் உருவத்தில்
இடி மின்னலாய்....எம்
இதயம் சிதறியது
இரத்த வெள்ளத்தில்-எம்
இருநூறுக்கும் மேற்பட்ட உறவுகள்
என்ன பாவம் செய்தோம்
ஏன் இறைவா -கை
ஏந்திய எம்முறவுகளை
ஏன் காக்கவில்லையே...
இதயம் இல்லா மனிதர்கள் போல-நீயும்
இருந்துவிட்டாயே-உம்
இல்லத்தில் தானே -எம் உறவுகள்
இறந்து கிடந்தனவே.....!!!
2019 சித்திரையில் தீவிரவாதம்
2020 சித்திரையில் தீராத கொரோன பயங்கர வதம்
சித்தம் முழுவதும் உறவுகளின் சத்தம்
சுத்தும் பூமியில் சாமிகள் இல்லையோ.....! நித்தம்
ஏங்கிய மனதில்
தூங்காத விழியில்
நீங்காத நினைவில்
தேங்கிய கனவுகளுடன் ஓராண்டு நிறைவில்
உள்ளத்தில் துன்பவெள்ளம்
உறவுகளே நீங்கள் வாழ்வது எங்கள் இல்லம்.
கவிஞர் வை.கஜேந்திரன்,BA
இலங்கை திருநாட்டின் இருண்ட நாள்-21-04-2019
கந்தக குண்டு அன்று
சொந்தங்களை கொன்று
கடந்து போனதே ஓராண்டு
கையில் பூச்செண்டுடன் இன்று
ஈஸ்ரர் தினத்திலே
ஈனப்பிறவிகளால்
இறை இல்லங்களிலில்
இயமன் உருவத்தில்
இடி மின்னலாய்....எம்
இதயம் சிதறியது
இரத்த வெள்ளத்தில்-எம்
இருநூறுக்கும் மேற்பட்ட உறவுகள்
என்ன பாவம் செய்தோம்
ஏன் இறைவா -கை
ஏந்திய எம்முறவுகளை
ஏன் காக்கவில்லையே...
இதயம் இல்லா மனிதர்கள் போல-நீயும்
இருந்துவிட்டாயே-உம்
இல்லத்தில் தானே -எம் உறவுகள்
இறந்து கிடந்தனவே.....!!!
2020 சித்திரையில் தீராத கொரோன பயங்கர வதம்
சித்தம் முழுவதும் உறவுகளின் சத்தம்
சுத்தும் பூமியில் சாமிகள் இல்லையோ.....! நித்தம்
ஏங்கிய மனதில்
தூங்காத விழியில்
நீங்காத நினைவில்
தேங்கிய கனவுகளுடன் ஓராண்டு நிறைவில்
உறவுகளே நீங்கள் வாழ்வது எங்கள் இல்லம்.
கவிஞர் வை.கஜேந்திரன்,BA
நீங்காத நினைவில்....ஓராண்டு நிறைவில்....
Reviewed by Author
on
April 21, 2020
Rating:

No comments:
Post a Comment