இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் நிவாரணத்தொகை! பணத்துடன் வழங்கப்படும் பொருட்கள் விபரம் -
கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை, நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை உள்ளிட்டவற்றை விலையில்லாமல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி திருச்சி மாவட்டத்தில் 7.84 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை முகாமில் உள்ள தமிழர்களுக்கும் நிவாரணத் தொகை, ரேஷன் பொருள்கள் வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளன.
நாளொன்றுக்கு 100 பேருக்கு பொருள்கள் வழங்கும் வகையில், நியாயவிலைக் கடைகள் தோறும் புதன்கிழமை முதல் டோக்கன் வழங்கப்பட்டது.


திருச்சி மாா்சிங்பேட்டை பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில், புதன்கிழமை டோக்கன் பெற பொதுமக்கள் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கூடினா்.
மேலும் ஒருவரையொருவா் தள்ளிக்கொண்டு டோக்கன் பெற முயன்றதால் வாக்குவாதமும், தள்ளு-முள்ளும் ஏற்பட்டது.
பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினா் அனைவரையும் ஒழுங்கு செய்து, சமூக இடைவெளியுடன் நின்று டோக்கன் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினா்.
திருச்சி கீழரண்சாலையிலுள்ள நியாய விலைக் கடை பணியாளா்கள், கருவாட்டுபேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன்களை விநியோகம் செய்தனா்.
இந்த டோக்கன்களில் எந்த திகதியில் எந்த நேரத்தில் வர வேண்டும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மணிநேரத்துக்கு 13 பேருக்கு மட்டுமே வழங்கும் வகையிலும், நாளொன்றுக்கு ஒவ்வொரு கடையிலும் தலா 100 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை முதல் பொருள்களும், உதவித் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் நிவாரணத்தொகை! பணத்துடன் வழங்கப்படும் பொருட்கள் விபரம் -
Reviewed by Author
on
April 03, 2020
Rating:
No comments:
Post a Comment