கொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் 09 இலங்கையர்கள் பலி -
இதில் இரண்டு இலங்கை வைத்தியர்களும் அடங்குவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த குறித்த வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கையர்களின் விபரங்கள்.
- ஹென்றி ஜயவர்தன (லண்டன் நகரில் பொறியியலாளராக கடமையாற்றியுள்ளார்)
- லகி விஜேரத்ன (61 வயது – லண்டனில் வசித்து வந்துள்ளார்.)
- சிதம்பரம் பிள்ளை குக பிரசாத் (75 வயது – வருமான வரி அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்)
- லொக்கு லியன வடுகே சுதத் திலக்சிறி (கிழக்கு லண்டனில் வசித்து வந்துள்ளார். பாணந்துரை சுமங்கல வித்தியாலயத்தின் பழைய மாணவர்)
- அநுர கால்லகே (62 வயது – வடக்கு லண்டனில் வசித்து வந்துள்ளார்)
- லலித் சூல பெரேரா (72 வயது – லண்டனில் வசித்து வந்துள்ளார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவன்)
- வைத்தியர் என்டன் செபஸ்டியன் பிள்ளே (75 வயது – கிங்ஸ்டன் வைத்தியசாலையின் முன்னாள் வைத்தியர்)
- வைத்தியர் சிவனந்தன் (76 வயது – ஓய்வூபெற்ற வைத்தியர்)
- பிரித்தானியாவின் வடக்கு பகுதியிலுள்ள முதியோர் இல்லத்திலுள்ள 80 வயதான நபரொருவரும் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்கா, இத்தாலி, சுவிஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 14 இலங்கையர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் 09 இலங்கையர்கள் பலி -
Reviewed by Author
on
April 09, 2020
Rating:

No comments:
Post a Comment