தளபதி விஜய் கூறிய அணைத்து 'குட்டி கதைகள்', ஒரு சிறப்பு தொகுப்பு...
தளபதி விஜய் தனது அணைத்து படங்களின் இசை வெளியீட்டு விழாக்களிலும் தனது ரசிகர்களுக்காக குட்டி கதைகளை பகிர்ந்து கொள்ளவார்.
ஆம் அந்த குட்டி கதைக்காக விஜய்யின் பல லட்சக்காண ரசிகர்கள் பல மணிநேரம் இசை வெளியீட்டு விழாவில் காத்துகொண்டு இருப்பார்கள்.
இந்நிலையில் தளபதி விஜய் இந்த குட்டி கதை கூறுவதை எங்கிருந்து ஆரம்பித்தார். இதுவரை என்னென்ன கதைகளை கூறியுள்ளார் என ஒரு சிறப்பு தொகுப்பாக பார்ப்போம்.
1. 'புலி' இசை வெளியீட்டு விழா
" எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க படத்தில் சில கல்லூரி மாணவிகளிடம் இந்திய வரைபடத்தை கிழித்து போட்டு அந்த வரைபடத்தின் பின் ஒரு முகத்தை வரைந்து வைத்திருப்பார். அந்த மாணவிகளிடம் இந்த முகத்தை ஒன்றாக சேர்க்க சொல்வார். ஆனால் அது அவர்களால் முடியாது, அந்த இந்திய வரைபடத்தை ஒன்றாக சேர்க்க சொல்லுவார். அப்போது மாணவிகள் அதனை சரியாக சேர்த்து விடுவார்கள்." என்ற குட்டி கதையை கூறுவார்.
2. 'தெறி' இசை வெளியீட்டு விழா
"முன்னாள் அதிபர் Mao, ஒரு நாள் தெருவில் சென்று கொண்டு இருந்த போது ஒரு வியாபாரியின் கடையில் இவரது புகைப்படங்கள் மட்டுமே இருந்தது. அதை பார்த்துவிட்டு அந்த வியாபாரியிடம் சென்று ஏன் என் படங்களை மட்டும் வைத்து விற்பனை செய்கிறாய். நீ மற்ற தலைவர்களின் படங்களையும் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என Mao கூறினார். அதற்கு அந்த வியாபாரி மற்ற தலைவர்களின் படங்கள் எல்லாம் விற்று போய்விட்டது. உங்கள் படம் மட்டும் தான் இன்னும் விற்கவில்லை என கூறினார்".
3. 'மெர்சல்' இசை வெளியீட்டு விழா
"ஒரு மருத்துவர் தனது வண்டியை ரிப்பேர் செய்ய ஒரு machanic-யிடம் சென்று இருந்தார். அப்போது அந்த machanic, மருத்துவரை பார்த்து நான் செய்யும் அதே விஷயத்தையே தான் நீங்களும் மருத்துவர் என்று பெயரில் செய்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த மருத்துவர், இதையெல்லம் வண்டி ஓடி கொண்டிருக்கும் பொழுது செய்துபார் என கூறினார்".
4. 'சர்கார்' இசை வெளியீட்டு விழா
"ஒரு மன்னார் தனது பரிவாரங்களுடன் ஊரை கவனிக்க சென்றார், அப்போது ஒரு கடையில் நின்று எலுமிச்சம் பழச்சாறு அருந்துகிறார் மன்னர். அப்போது அதில் கொஞ்சம் உப்பு போட்டு தாருங்கள் என கேட்கிறார். ஆனால் அந்த கடையில் உப்பு இல்லை. அப்போது அந்த கடையின் முதலாளி தனது தொழிலாளியிடம் அந்த கடை வீதியில் கொஞ்சம் உப்பு சென்ற எடுத்து வா என கூறுகிறார். அதற்கு மன்னர் அப்படியெல்லாம் எடுத்து வர கூடாது, நானே காசு கொடுக்காமல் இதை செய்தால் எனக்கு பின் வரும் பரிவாரங்கள் உரையே கொள்ளையடித்து விடும் என கூறினார்".
5. 'பிகில்' இசை வெளியீட்டு விழா
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
"ஒரு பூக்கடையில் வேலை செய்தவனை கொண்டு வந்து, பட்டாசு கடையில் வேலை செய்ய வைத்தார்கள். அதன்பின் அங்கு ஒரு பட்டாசு கூட விற்பனை ஆகவில்லை. ஏனென்றால் அவன் பூக்கடையில் சில மணிநேரம் தண்ணீர் தெளித்து விடுவான். அதையே இங்கும் செய்து வந்தான்" என கூறினார்.
6. 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா
"நம் வாழ்வு ஒரு நதி போலத்தான், ஒரு இடத்தில் நம்மை வரவேற்பார்கள், ஒரு இடத்தில் நாம் கொண்டாடுவார்கள், ஒரு சில இடத்தில் நம் மேல் கல் எடுத்து அடிப்பார்கள்" என ஒரு குட்டி கதையை கூறுவார்.
இவைகள் தான் இதுவரை தளபதி விஜய் நமக்கு கூறிய அழகிய குட்டி கதைகள்.
தளபதி விஜய் கூறிய அணைத்து 'குட்டி கதைகள்', ஒரு சிறப்பு தொகுப்பு...
Reviewed by Author
on
April 21, 2020
Rating:

No comments:
Post a Comment