வைட்டமின் டி உணவுகளை எடுத்துக்கொள்வது வைரஸிற்க்கு எதிராக பாதுகாக்குமா? -
குறிப்பாக இன்று உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட முக்கிய காரணம் உடலில் வைட்டமின் டி குறைவாக இருப்பதுதான் என்று கூறப்படுகின்றது.
நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தவரை வைட்டமின் டி என்பது அத்தியாவசியமானதாகும்.
இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.
வைட்டமின் டி நிறைந்த உணவுப்பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பை பெருமளவில் குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அந்தவகையில் வைட்டமின் டி எப்படி உங்களை கொரோனாவிடம் இருந்து பாதுகாக்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
வைட்டமின் டி எப்படி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது?
வைட்டமின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு பண்புகள் இரண்டையும் கொண்டுள்ளது மற்றும் நோயெதிர்ப்பு மண்டல பாதுகாப்புகளை செயல்படுத்துவதற்கு முக்கியமானது.
வைட்டமின் டி எடுத்துக்கொள்வது வைரஸிடமிருந்து பாதுகாக்குமா?
“வைட்டமின் டி உணவுகள் உங்களை கொரோனாவில் இருந்து நிச்சயம் பாதுகாக்கும் என்று ஆய்வுகள் கூறவில்லை”. ஆனால் வைட்டமின் டி குறைபாடு நிச்சயம் நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறுகிறது.உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருப்பது அல்லது போதுமான அளவு வைட்டமின் டி உணவுகளை எடுத்துக் கொள்வதும் உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மேலும் சுவாச நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.
ஆய்வுகள் கூறுவது என்ன?
தினமும் வைட்டமின் டி உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கொரோனா தாக்குதலில் இருந்து உங்களை பெரும்பாலும் பாதுகாத்துக் கொள்ளலாம். அதேசமயம் இடைவெளி விட்டு எடுத்துக்கொள்ளும் போது அதன் செயல்திறன் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் போன்ற சுவாச நோய்களை உருவாக்கும் அபாயத்தில் இருக்கும் வயதானவர்களில் வைட்டமின் டி பொருட்கள் இறப்பைக் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
என்ன உணவுகளை எடுத்து கொள்ளலாம்?
- கொழுப்பு நிறைந்த மீன்கள்
- ஆரஞ்சு ஜுஸ்
- சோயா மில்க்
- சீஸ்
- முட்டையின் வெள்ளைக்கரு
- காளான்
- கீரை
வைட்டமின் டி உணவுகளை எடுத்துக்கொள்வது வைரஸிற்க்கு எதிராக பாதுகாக்குமா? -
Reviewed by Author
on
April 09, 2020
Rating:

No comments:
Post a Comment