நிந்தவூரில் ஹரோயின் போதைப் பொருளுடன் 16, 20 வயதுடைய இருவர் கைது
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள நிந்தவூர் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 16 , மற்றும் 20 வயதுடைய இருவரை நேற்று (19) இரவு கைது செய்துள்ளதுடன் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
நிந்தவூர் பிரதேசத்தில் சிறுசிறு களவுகளான தேங்காய், மற்றும் புறா போன்று களவாடப்படுவதாக பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சம்மாந்துறை பெருங்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 16, 20 வயதுடைய இருவரை நேற்று இரவு கைது செய்து விசாரணையின் போது அவர்கள் போதைவஸ்துக்கு அடிமையாகிய நிலையில் அவர்கள் போதைப் பொருள் வாங்குவதற்கான பணத்தேவைக்காக இந்த பிரதேசத்தில் சிறு சிறு களவுகளை மேற்கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் அவர்கள் இருவரது உடைமையில் இருந்து 60 மில்லிக் கிராம் 610 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருட்களை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
நிந்தவூரில் ஹரோயின் போதைப் பொருளுடன் 16, 20 வயதுடைய இருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
May 20, 2020
Rating:

No comments:
Post a Comment