ஹக்கீம்,ஹிஸ்புல்லா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட 22 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு?
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும், பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களாகவும், நாடாளுமன்றின் முக்கிய பதவிகளை வகித்த சிலருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஹிஸ்புல்லா உள்ளிட்ட நல்லாட்சியில் பதவி வகித்த சிலருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட பதவிகளை வகித்த 22 பேர் இதுவரையில் தங்களது அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம், ரவீந்திர சமரவீர, அப்துல் ஹாலீம், சாந்தனி பண்டார, லக்ஸ்மன் செனவிரட்ன, அமீர் அலி, எட்வட் குணசேகர, நலின் பண்டார, ஜே.சீ.அலவத்துவல, அசோக அபேசிங்க, சம்பிக்கா பிரேமதாச, வடிவேல் சுரேஸ், எச்.எம்.எம்.ஹாரீஸ், பைசல் காசீம், துலிப் விஜேசேகர, துனேஸ் கன்கந்த, பைசர் முஸ்தபா, ரீ.பி.ஏக்கநாயக்க, சந்திம வீரக்கொடி, எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ், ஜகத் புஸ்பகுமார மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே இவ்வாறு தங்களது அதிகாரபூர்வ இல்லங்களை இதுவரையில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 11ம் திகதியின் பின்னர் இவ்வாறு வழக்குத் தொடரப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
ஹக்கீம்,ஹிஸ்புல்லா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட 22 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு?
Reviewed by Author
on
May 06, 2020
Rating:

No comments:
Post a Comment