250000 தாண்டிய துயரம்: அதிரும் உலக நாடுகள் -
சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இருஓஇனும் இந்த வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது என உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 36 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 21 லட்சத்து 91 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவர்களில் 50 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இதுவரை 11 லட்சத்து 79 ஆயிரத்து 215 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
இருப்பினும், இந்த கொடிய கொரோனாவுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 847 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ள நாடுகள்:
- அமெரிக்கா - 69,143
- ஸ்பெயின் - 25,428
- இத்தாலி - 29,079
- இங்கிலாந்து - 28,734
- பிரான்ஸ் - 25,201
- ஜேர்மனி - 6,893
- துருக்கி - 3,461
- பிரேசில் - 7,106
- ஈரான் - 6,277
- சீனா - 4,633
- கனடா - 3,842
- பெல்ஜியம் - 7,924
- இந்தியா - 1,452
- நெதர்லாந்து - 5,082
- சுவிட்சர்லாந்து - 1,784
- ஈக்வடார் - 1,569
- மெக்சிகோ - 2,154
- ஸ்வீடன் - 2,769
250000 தாண்டிய துயரம்: அதிரும் உலக நாடுகள் -
Reviewed by Author
on
May 05, 2020
Rating:

No comments:
Post a Comment