மன்னார் அறுகம் குன்று பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை....படங்கள் (
மன்னார் -நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்கு உற்பட்ட அறுகம் குன்று கிராமத்தில் உள்ள சில குடும்பங்கள் அடிப்படை வசதிகள் உற்பட வீடுகள் இன்றி மிகவும் வறுமை பட்ட நிலையில் 'கொரோனா' அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக அன்றாட கூலி தொழிலையும் இழந்து மிகவும் வறுமையில் வாடிய நிலையில் குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் ஊடகங்கள் ஊடாக வெளி கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பாக உடனடியாக செயற்பட்ட நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் அறுகம் குன்று பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அந்த அடிப்படையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான நீர் மற்றும் மின்சார வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டதுடன் அவர்களுக்கான காணிகளின் உறுதி பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டார்.
அத்துடன் அவர்களுக்கான சமூர்த்தி கொடுப்பனவு மற்றும் அரச வீட்டுதிட்டம் தொடர்பான நிலைமையையும் நேரடியாக மக்களுக்கு தெரியப் படுத்தியிருந்தார்.
அதே போன்று குறித்த பகுதி மக்களின் உண்மை நிலையை அறிந்த உதவும் மனம் கொண்ட பலர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அறுகம் குன்று பகுதியை சேர்ந்த அக்குடும்பங்களுக்கு தேவையான வாழ்வாதார உதவிகள் மற்றும் உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
குறிப்பாக நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர்களான .ரொஜன் மற்றும் ஜீவன் ஆகயோர் ஊடாக அவர்களுக்கான பண உதவி மற்றும் அப்பகுதியில் உள்ள ஐந்து குடும்பங்களுக்கான மூன்று மாதங்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான பண பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னார் பொறியியளாலர் சம்மேளன உறுப்பினர்களால் அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களுக்கான கழிப்பறை அமைப்பதற்கான பணம் சேகரிக்கும் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது.
மேலும் மன்னார் பிரஜைகள் குழுவினரும் குறித்த மக்களுக்கான அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.
M

Reviewed by Admin
on
May 25, 2020
Rating:

No comments:
Post a Comment