அண்மைய செய்திகள்

recent
-

போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ செயலணி இன்று கூடுகின்றது


போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ செயலணி இன்று (19) முதல்தடவையாக கூடவுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இந்த குழு கூடவுள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை, பொதுப் போக்குவரத்து சேவையை பாதுகாப்பாக முன்னெடுப்பதற்கு இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த செயலணியில் 21 அங்கத்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்த செயலணியின் தலைவராக அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன செயற்படுவதுடன், மேலதிக செயலாளர் ஜே.எம்.திலகரத்ன பண்டா இந்த செயலணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரயில் பொதுமுகாமையாளர் , பஸ் சங்கங்கள் , இலங்கை போக்குவரத்து சபை , தேசிய போக்குவரத்து ஆணைக்குழு , மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர்.

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ செயலணி இன்று கூடுகின்றது Reviewed by NEWMANNAR on May 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.