வடகொரிய அதிபருக்கு ரஷ்ய அதிபரின் விருது... கிம் ஜாங் உன் உடல் நல கோளாறால் வரவில்லை! -
இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் ஜேர்மனியைத் தோற்கடித்ததை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வடகொரியாவில் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்ட நினைவிடத்தை பாதுகாத்து வருவதற்கான வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் விருது வழங்கினார்.
வடகொரியாவின் தலைநகர் யாங்யாங் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடகொரியவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் மட்ஸ்கோரா, வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சன் வான்னிடம் இந்த விருதை வழங்கினார்.
இந்த விருதை பெற அதிபர் கிம் ஜாங் உன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல் நலக்கோளாறு காரணமாக அவர் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர், சில நாட்களாக வெளியில் தென்படாமல் இருந்தது உண்மையில் உடல்நலக்கோளாறாக இருக்கலாம் என்று அனைவரும் விவாதித்து வருகின்றன.

மேலும், இந்நிகழ்ச்சியில், அதிகாரிகள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். முன்னதாக வடகொரியாவில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வடகொரிய அதிபருக்கு ரஷ்ய அதிபரின் விருது... கிம் ஜாங் உன் உடல் நல கோளாறால் வரவில்லை! -
Reviewed by Author
on
May 06, 2020
Rating:
No comments:
Post a Comment