கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்க இது தேவை! போப் ஆண்டவர் விடுத்துள்ள வேண்டுகோள்
போப் ஆண்டவர் பிரான்சிஸ், நேற்று அப்போஸ்தல அரண்மனை நூலகத்தில் இருந்தபடி ஆசி வழங்கினார். பின்னர், அங்கிருந்து அவர் பேசுகையில்,
கொரோனா வைரசுக்கு பாதுகாப்பான, உறுதிவாய்ந்த தடுப்பூசி கண்டறியும் பணி பல நாடுகளில் ஏற்கனவே நடந்து வருகிறது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வெவ்வேறு மருந்துகளை பயன்படுத்திய அனுபவங்களை விஞ்ஞானிகளும், டாக்டர்களும் பகிர்ந்து வருகிறார்கள்.
தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். நோய்வாய்ப்பட்ட ஒருவர் மருத்துவ வசதி பெறுவதில், உலகளாவிய அத்தியாவசிய தொழில்நுட்பங்களை பெறும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.
மேலும், கொரோனா பிரச்சினையில் இருந்து மனிதர்கள் மீள கடவுளை வேண்டி, அனைத்து மதத்தினரும் வருகிற 14-ந் திகதி பிரார்த்தனை, நோன்பு மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்க இது தேவை! போப் ஆண்டவர் விடுத்துள்ள வேண்டுகோள்
Reviewed by Author
on
May 04, 2020
Rating:

No comments:
Post a Comment