வெசாக் பௌணர்மி தினத்திற்கு மாபெரும் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த தமிழர்களை புகழ்ந்து பாராட்டும் பிரதமர் -
பௌத்த மக்களின் மிக முக்கியமான தினங்களில் ஒன்றாக போற்றப்படும் வெசாக் பௌர்ணமி தினத்திற்கு மாபெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்த தமிழர்களை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற அரச வெசாக் நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெசாக் பௌணர்மி தினத்தை சர்வதேச விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அரும்பாடுபட்டார் எனவும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெசாக் தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கும் யோசனையை சேர் பொன்னம்பலம் ராமநாதன் முன்மொழிந்தார் என பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்தர்களின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று நன்றி பாராட்டுவதாகும் எனவும், கௌதம புத்தர் ஞானம் பெற்றுக்கொண்ட உடன் முதலில் அரச மரத்திற்கு நன்றி பாராட்டினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில், வெசக் பௌர்ணமி தினத்தை இலங்கையில் பொது விடுமுறையாக அறிவிப்பதற்கும், சர்வதேச ரீதியில் பொது விடுமுறையாக அறிவிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் அரும்பாடு பட்ட தேசிய வீரர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து பாராட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெசாக் பௌணர்மி தினத்திற்கு மாபெரும் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த தமிழர்களை புகழ்ந்து பாராட்டும் பிரதமர் -
Reviewed by Author
on
May 07, 2020
Rating:

No comments:
Post a Comment