உயிரை காப்பாற்றிய மருத்துவரின் நினைவாக பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டிய பிரித்தானிய பிரதமர் -
பிறந்த குழந்தையின் பெயரை Wilfred Lawrie Nicholas Johnson என தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த கேரி சைமண்ட்ஸ், அதற்குரிய விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
Wilfred மற்றும் Lawrie ஆகிய இரு பெயர்களும் முறையே தங்கள் இருவரின் தாத்தாக்களின் பெயர் எனவும்,
கொரோனாவால் தீவிர சிக்கலுக்கு உள்ளான பிரதமர் ஜான்சனை காப்பாற்றிய மருத்துவர்கள் Nick Price மற்றும் Nick Hart ஆகிய இருவரின் நினைவாக தங்களின் மகனது பெயரில் Nicholas என சேர்த்துள்ளதாகவும் கேரி சைமண்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, மகப்பேறுக்கு உதவிய அனைத்து மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார் கேரி சைமண்ட்ஸ்.
உயிரை காப்பாற்றிய மருத்துவரின் நினைவாக பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டிய பிரித்தானிய பிரதமர் -
Reviewed by Author
on
May 03, 2020
Rating:
No comments:
Post a Comment