அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த புத்தளம் மாவட்டத்தை நிறந்தர வதிவிடமாக கொண்ட 2500 வாக்காளர்களின் பதிவுகள் புத்தளத்திற்கு மாற்றம்.

இம்முறை தேர்தலில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது சுமார் 2 அயிரம் 500 வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதற்கான காரணம் புத்தளம் மாவட்டத்தில் நிறந்தர வதிவிடங்களை கொண்டவர்களின் பெயர்கள் இங்கிருந்து புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டமையினால் குறித்த குறைவு ஏற்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார்.

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன் ஆயத்தம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் இடம் பெற்றது.

ஊடகவியலாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு இடையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை மன்னார் மாவட்டத்தில் நீதியானதும், நேர்மையானதும், சுகாதார வழி முறைகளை பின் பற்றியும் குறித்த தேர்தலை நடாத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தற்போது மன்னார் மாவட்டத்திற்கான தேர்தல் முறைப்பாட்டு நிலையத்தை ஆரம்பித்து கடந்த புதன் கிழமை முதல் மாவட்ட மத்திய முறைப்பாட்டு நிலையம் இயங்கி வருகின்றது.

குறித்த முறைப்பாட்டு நிலையத்தின் தொலைபேசி இலக்கம்-023-2223820.குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.அதற்கு பொறுப்பாக மன்னார் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொகான் குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

-நேரடியாக தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்திலும் தங்களுடைய முறைப்பாடுகளையும் பதிவு செய்ய முடியும் அலல்து 011-2886179 என்றை தொலைபேசி இலக்கத்தினூடாகவும் முறைப்பாடு செய்ய முடியும்.தற்போது தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மாவட்ட மட்டத்தில் திறக்கப்பட்டு வருகின்றது.

-அதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முறை அனுமதி வழங்கப்படும் போது பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக அனுமதிகள் வழங்கப்படும்.

-அதனடிப்படையில் மத்திய தேர்தல் அலுவலகம்,கிளை அலுவலகங்களை தற்போது தொடக்கம் அரசியல் கட்சிகள்,சுயேட்சைக் குழுக்கள் திறந்து வருகின்றனர்.

-இவற்றை விட மன்னார் மாவட்டத்தில் இம்முறை 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அந்த வகையில் அணைத்து வாக்காளர்களும் சுகாதார நடை முறைகளை கருத்தில் கொண்டும்,நாட்டின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் வாக்களிப்பில் இருந்து தவராமல் அனைவரும் உட்சாகமாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும்.தபால் மூல வாக்களிப்பை பொறுத்தவகையில் 4 ஆயிரத்து 255 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.அவற்றில் 59 விண்ணப்பங்கள் நிறாகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 4 ஆயிரத்து 196 பேர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.தபால் மூல வாக்களிப்பிற்கான வினியோகம் எதிர் வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

இம்முறை தேர்தலில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது சுமார் 2 அயிரம் 500 வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதற்கான காரணம் புத்தளம் மாவட்டத்தில் நிறந்தர வதிவிடங்களை கொண்டவர்களின் பெயர்கள் இங்கிருந்து புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டமையினால் குறித்த குறைவு ஏற்பட்டுள்ளது.

ஏனைய வாக்குச் சீட்டுக்கள் அணைத்தும் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எதிர் வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடை பெற உள்ள தேர்தலில் அனைவரும் கலந்த கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களியுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.







இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட  விளம்பரம் 
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த புத்தளம் மாவட்டத்தை நிறந்தர வதிவிடமாக கொண்ட 2500 வாக்காளர்களின் பதிவுகள் புத்தளத்திற்கு மாற்றம். Reviewed by Author on June 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.