அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை உலக சமாதான சுட்டியில் 77 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது...........

2020 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 77 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 72 ஆவது இடத்தை பெற்றிருந்தது.

எவ்வாறாயினும் இம்முறை இலங்கை 5 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.

இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது.

நியூசிலாந்து, போர்த்துக்கல், ஆஸ்திரியா, டென்மார்க், கனடா, சிங்கப்பூர், செக் குடியரசு, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உலக சமாதான சுட்டியில் முதல் 10 இடங்களிலுள்ளன.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவுக்கு 139 ஆவது இடம் கிடைத்துள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா 2 இடங்கள் முன்னேறியுள்ளன.

உலகில் மோதல்கள் இடம்பெறும் நாடுகளில் லிபியா, சோமாலியா, யேமன், தென் சூடான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

இதன்பிரகாரம், 81 நாடுகளில் அமைதி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 80 நாடுகளில் அமைதி சீர்குலைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இலங்கை உலக சமாதான சுட்டியில் 77 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது........... Reviewed by Author on June 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.