முரண்பாட்டு நிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு
மாவட்ட ரீதியில் தோற்றம் பெறும் முரண்பாடுகள் மக்கள் மத்தியில் வன்முறையாக மாற்றம் அடையாமல் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில்(CCT) அதன் மாவட்ட இணைப்பாளர் திரு.ஜோண்சன் தலைமையில் விசேட செயலமர்வானது கிராம அபிவிருத்தி நிறுவன மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றது
மத ரீதியாக இன ரீதியாக தேர்தல் காலங்களிலும் ஏனையா சாதாரண நிலைமைகளிலும் முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்ற போதிலும் மக்கள் கிராம மட்டத்தில் அவ்வாறான முரண்பாடுகள் தொடர்பாகவும் அவற்றை நல்லிணக்க அடிப்படையில் சமரசம் செய்து கொள்வது தொடர்பாக திரு.பெனிக்னஸ் அவர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டது
குறித்த விழிப்புணர்வு செயலமர்வில் கிராம மட்ட தலைவர்கள் இளைஞர்கள் சமூக ஆர்வளர்கள் முககவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை பேணி கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது
முரண்பாட்டு நிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு
Reviewed by Admin
on
June 28, 2020
Rating:

No comments:
Post a Comment