அண்மைய செய்திகள்

recent
-

தனி நபர் பிரச்சினையை இரு சமூக பிரச்சினையாக திசை திருப்பியமை தொடர்பில் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குவிற்கு மகஜர் கையளிப்பு.


தனி நபர் பிரச்சினையை இரு சமூக பிரச்சினையாக திசை திருப்பியமை தொடர்பில் மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளி பகுதியில் வசிக்கு குடும்பம் ஒன்று மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குவிற்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளி பகுதியில் வசிக்கும் யேசுராஜா விஜயறாஜ் என்பவரே குறித்த மகஜரை கையளித்துள்ளார்.

-குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,

தனி நபர் பிரச்சனையை இரு சமூக இனப்பபிரச்சனையாக திசைதிருப்பியமை மேற்படி முகவரியில் வசித்து வருகின்ற யேசுராசா விஜயறாஜ் ஆகிய நான் தேசிய இளைஞர் படையணி மன்னார் நிலையத்தில் நன்னடத்தை மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தராக கடமை புரிகின்றேன்.

எனது மனைவி றொபினாகுரூஸ் குடும்பநல உத்தியோகஸ்தகராக கடமைபுரிகிறார். நாங்கள் தினமும் வேலைக்கு செல்வது வழக்கம்.

 வீட்டில் நிற்கும் நேரம் பெரும்பாலும் குறைவு .எமது வீட்டுக்கு அருகாமையில் ஒரு பொதுவான பாதை உள்ளது. அதன் அருகில் வீட்டிற்கு பின்புறத்தில் நீதி மன்றத்தில் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற நிலையில் இருக்கும் பதிவாளர் ,அவருடைய இரு மகன் மற்றும் அவரது மாமானார் மற்றும் மனைவி பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.

அவருடைய வீட்டிற்கருகாமையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ்
உத்யோகத்தகர் , அவருடைய மனைவி பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.இவர்களுடைய வீட்டிற்கும் எனது வீட்டிற்கும் பொதுவாக பாதையானது  15அடி அகலமுடைய பாதையாகும்.

29.05.2020 அன்று இவர்கள் கொங்கிறீற் தூண்கள் மூலமாக அவர்களுடைய வீட்டு முற்றத்திற்கு முள் வேலி அடைக்க முயன்றார்கள்.

அதன் போது பாதையின் அகலத்தை கிட்டத்தட்ட 9அடி அகலமாக குறைத்து
அடைத்தார்கள்.

இப் பாதையால் மக்களின் அன்றாடதேவையான நீர், மரக்கறி மற்றும் பாண், வியாபார வாகனங்கள் வந்து செல்வதற்கு இடையூறாக இருந்தது.

இவ் அநீதியான செயற்பாட்டை பொது மகன் என்ற ரீதியில் 01.06.2020 அன்று மன்னார் நகர
 சபையில் முறைப்பாடு செய்தேன்.

 நகர சபை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பாதையை அளந்த போது வீட்டின் 4அடி கட்டுமான பகுதியானது பொது பாதையில் கட்டப்பட்டுள்ளதாகவும் வீட்டு அனுமதிப்பத்திரத்தில் சட்ட விரோத முறைகேடு இருப்பதாகவும் பரிசீரனை செய்து குறித்த வேலையை இடைநிறுத்தி தொடர்ந்து வேலை செய்தால் சட்டநடவடிக்கை எடுப்பதாகவும்
எச்சரிக்கை செய்து சென்றனர்.

அன்று வேலை முடிந்து நானும் எனது மனைவியும் எனது வீட்டில் இருந்த போது இரவு 9.30 மணியளவில் எனது வீட்டில் இருபுறமும் உள்ள பாதையில் நீதிமன்ற பதிவாளர் , அவருடைய இருமகன்   மற்றும் அவருடைய மாமனார்  வர்களுடைய நண்பர்கள்  ஆகியோர் உட்பட 15பேர் கொண்ட சட்டவிரோத கும்பலுடன் கம்புகள் விக்கற் தடிகளுடன் என்னை வெளியில் வரும்படியும் எனது தலையை வெட்டி எனது மனைவியிடம் கொடுப்பதாகவும் தகாதவார்த்தை பிரயோகங்களை கூறி15 நிமிடங்களுக்கு மேல் சத்தம் போட்டுக்கொண்டு நின்றார்கள்.


நான் வீட்டிற்குள் இருந்தபடி 119 பொலிஸ் பிரிவிற்கு அழைப்பு எடுத்து முறைப்பாடு செய்தேன். அந்நேரத்தில் எனது உறவினரான ஜிம்றோன் நகரில் வசிக்கும் அந்தோனிப்பிள்ளை மைக்கல் ஜெனோவிற் எனது வீட்டிற்கு வந்தார்.

எனது வாசலின் முன் வைத்து விற்கற் கொட்டான்களால் அடித்து காயப்படுத்தி மண்டையையும் உடைத்தனர். எனது
பிரதான மதில் கதவை அடித்து சேதப்படுத்தி உள்நுழைய முற்பட்டனர்.நாங்கள் அச்சம் காரணமாக வெளியில் வரவில்லை.

பின்னர் இப்பாதையின் வழியாக றோந்து நடவடிக்கையில் வந்த இரண்டு இரானுவத்தினரை கண்டவுடன் எனது வீட்டின் முன்னின்ற சட்டவிரோத கும்பல் தலை மறைவாகி விட்டனர். பின்னர் 11.30 மணியளவில் பொலிஸ் ரோந்து வாகனம் எனது
வீட்டின் முன் வந்தது.

  அவர்களின் உதவியுடன் நாங்கள் பொலிஸ் நிலையம் சென்றுநடந்த சம்பவத்தை முறைப்பாடு செய்தோம்.

பின்னர் மன்னார் பொலிஸ் நிலையம் 05பேரை மட்டும் 15.06.2020 அன்று நீதி மன்றத்தில் ஆயர் படுத்தி பிணையில் விடுதலை
செய்தனர்.

ஆனாலும் பிணைக்குற்றவாளிகளாய் இருந்துகொண்டு   சட்டவிரோத கும்பல்களுடன் மறுதினமான 16.06.2020 அன்று இரண்டு வாகனங்களில் என்னையும் எனது மனையையும் அவமானப்படுத்தி பழிவாங்கும் நோக்கத்தோடு நாங்கள் வேலைசெய்யும் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்   தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்வதாக கூறி என்னையும் எனது மனைவியையும் அவமானப்படுத்தி தலைகுனிய வைத்து காரியாலய அதிகாரியிடம் மூர் வீதி கிராம அபிவிருத்தி சங்கத்தின் கடித தாள் சட்டவிரோத முறையில் பயன்படுத்தி தகாத வார்த்தைகளை அதில் பிரியோகித்து அலுவலக பொறுப்பதிகாரியிடம்
கையளித்தனர்.

இதனால் நானும் எனது மனைவியும் வேலை செய்யும் அலுவலகத்தில் மிகவும் மனஉளைச்சலுக்கு உள்ளாகினோம்.

மேலும் இவர்கள் சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகையிலும் தங்களது தவறை மறைத்து நீதி மன்றததில் நடைபெறும் வழக்கை திசைத்திருப்புவதற்காக சமூகத்தில் இனரீதியான பிரச்சனையை உண்டு பண்ணி அதற்கு எங்கள் மீது பழியைப் போடுவதற்காக இவ்வாறான கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டார்கள்.

எனவே குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் அவர்களுடைய மிகுதி நண்பர்கள் மூர்வீதி கிராம அபிவிருத்தி சங்க கடித தாள் தவறாக பயன்படுத்திய தலைவர் செயலாளர் இவர்களுக்கெதிராக தகுந்த சட்டநடவடிக்கை எடுத்து எங்களின் மன உளைச்சளுக்குரிய சரியான நீதியை பெற்றுத்தருமாறு தாழ்iயுடன் கேட்டுக்கொள்கிறேன்.என குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி


http://www.newmannar.lk/2020/06/16.html


தனி நபர் பிரச்சினையை இரு சமூக பிரச்சினையாக திசை திருப்பியமை தொடர்பில் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குவிற்கு மகஜர் கையளிப்பு. Reviewed by Admin on June 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.