இன்று அதிகாலை வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்........
நுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி பயணித்த கார் இன்று அதிகாலை 01 மணியளவில் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த காரானது வீதி கரையில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியதாக தெரியவருகிறது.
விபத்தில் காரை ஓட்டிய நபரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்திற்கு இலக்கான கார் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இது
தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்........
Reviewed by Author
on
June 09, 2020
Rating:

No comments:
Post a Comment